ஆற்று மணல் ஏற்றிச் சென்ற வாகனம் பறிமுதல்
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் ஆற்று மணல் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் குவாரி எதுவும் செயல்படாததால் கட்டுமான பணிகளுக்கான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதை பயன்படுத்தி மயிலாடுதுறை பகுதியில் அங்காங்கே சில ஆறு வாய்க்கால் போன்ற பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மணல் ஏற்றிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்,, இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதற்கிடையே செம்பனார்கோவில் கீழ பள்ளக் கொள்ளை பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் செம்பனார் கோவில் போலீஸ் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி சென்று பார்த்த போது அரை யூனிட் ஆற்று மணலை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டு தப்பி ஓடி விட்டார் உடனே வாகனத்தை செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.