திண்டுக்கல்லில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மேயர்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேயர் இளமதி ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-13 11:21 GMT
பணிகளை ஆய்வு செய்த மேயர்
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 32 ல் நடைபெற உள்ள பல்வேறு சிறப்பு செயலாக்க திட்ட பணிகளை மேயர் இளமதி , துணை மேயர் ராஜப்பா , மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மேயர் இளமதி கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் சேமிப்பு விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல வளர்ச்சி பணிகளை செய்ய உள்ளோம்.
மழை காலங்களில் தண்ணீர் வடிந்தோடும் வகையில் கால்வாயில் அனைத்தும் தூர்வாரி சுத்தம் செய்யப்படுகிறது. மழைநீர் வீணாக்காமல் ஆங்காங்குவதற்கு தேங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு சேமிப்பு மையங்கள் தூர்வாரப்படுகிறது என்றார்.