தூத்துக்குடியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த மேயர்
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் பல்வேறு சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரி்யசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் பல்வேறு சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரி்யசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சண்முகபுரம் சந்தை ரோட்டில் இருந்து ஜார்ஜ் ரோட்டை இணைக்கும் பிரதான சாலையானது என்டு டூ என்டு என்ற முறையிலே அகலப்படுத்தி நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.
மேலும், போல்டன்புரம் முதலாவது தெருவில் உள்ள பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, அந்தப் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த வடிகால் மற்றும் மின் விளக்கு வசதிகள் உடனடியாக செய்து தரப்படும் உறுதியளித்தார்.
ஆய்வின் போது வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், திமுக நிர்வாகி ஆவுடையப்பன் உள்ளிட்டாேர் உடனிருந்தனர்.