நாகர்கோவில் போக்குவரத்து நெருக்கடி குறைக்க மேயர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-03 07:34 GMT
மேயர், ஆணையாளருடன் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் தற்போது இரட்டை ரயில் பாதைக்கான பணியால் அந்த பகுதி போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் வடசேரி அசம்பு ரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் அசம்பு ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். அதன்படி பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சாலையோர தற்காலிக கடைகளை மாற்ற உத்தரவிட்டார்.

வடசேரி சந்திப்பு வரை பார்வையிட்டு, சிரமம் இல்லாமல் வாகனங்கள் செல்ல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியம், நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News