போலியோ இல்லாத மாநகரை உருவாக்குவோம் : மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

Update: 2024-03-03 18:09 GMT

போலியோ சொட்டு மருந்து 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 138 க்கும் மேற்பட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 25460 மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மகாம்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள பிஹெச் சென்டரில் மேயர் ஜெகன் பெரியசாமி சொட்டு மருந்தினை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகர மக்கள் தங்கள பகுதிகளில் நடைபெறும் முகாமில் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மறக்காமல் போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து போலியோ இல்லாத ஒரு மாநகரத்தை உருவாக்குவோம் என்று உறுதி ஏற்போம் என்றார். நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் சுமதி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்டகழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தெய்வேந்திரன், வட்ட பிரதிநிதி பேச்சிமுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News