பிளம்பருக்கு பேரூராட்சி தலைவியின் கணவர் மிரட்டல்
திருநெல்வேலி, சேரன்மகாதேவியில் சொந்த முயற்சியில் பள்ளத்தை சரிசெய்த பிளம்பருக்கு பேரூராட்சி தலைவியின் கணவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-02-28 08:02 GMT
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சியின் 18வது வார்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.வார்டு கவுன்சிலர் தேவியின் சொந்த முயற்சியில் பள்ளத்தை சரி செய்தபோது பேரூராட்சி தலைவியின் கணவர் ஐயப்பன் உள்பட 5 பேர் பிளம்பர் மைக்கேல் ராஜூக்கு இன்று (பிப்.27) கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் சேரன்மகாதேவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.