மயூரநாதர் பிச்சக்கட்டளை கற்பக விக்னேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் ஸ்ரீ மயூரநாத சுவாமி பிச்சகட்டளை ஸ்ரீ கற்பக விக்னேஸ்வர ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

Update: 2024-04-25 08:56 GMT

கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை டவுன் 5 நம்பர் புது தெருவில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மாயூரநாத சுவாமி பிச்சகட்டளை ஸ்ரீ கற்பக விக்னேஸ்வர ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 23ஆம் தேதி விக்னேஸ்வர் பூஜை மகா சங்கல்பம் செய்யப்பட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவுற்று பூரணஹூதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தங்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கே வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News