மதிமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

காவிரி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் ,சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோரியும் பள்ளிபாளையம் நகர மதிமுக சார்பில், ஆவத்திப்பாளையம் பகுதியில் கண்டன தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-30 07:45 GMT

மதிமுக கூட்டம் 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் சாக்கடை வழியாக திறந்து விடப்படுவதால்,அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் காவிரி ஆற்றுநீரை பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு தோல் நோய், உள்ளிட்ட உடல் உபாதை பிரச்சனைகள் ஏற்படுகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் ,சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பள்ளிபாளையம் நகர மதிமுக சார்பில், பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை ஆவத்திப்பாளையம் பகுதியில் கண்டன தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

மதிமுக நகர செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மதிமுக மாவட்ட செயலாளர் கே.கே.கணேசன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். இதில் இடது சாரி சிந்தனையாளர் நடுவோம் ராஜா ராம், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அசன், தி.வி.க முத்துப்பாண்டி , மதிமுகவினர் மற்றும் இடதுசாரி கட்சி ஆதரவு அமைப்பினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டு காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர் . திரளானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News