திருப்பயத்தங்குடியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருப்பயத்தங்குடி ஊராட்சியில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2024-06-25 04:01 GMT

 கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 

 நாகப்பட்டினம், மாவட்டம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ரமேஷ் உத்தரவின் பேரில், உதவி இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பசு மாடுகள், எருமை மாடுகள், கன்று குட்டிகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கால்நடை உதவி டாக்டர் முத்துகுமரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் எழிலரசி,செயற்கை முறை கருவூட்டாலர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News