கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வெங்கனப்பாளையத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2024-06-26 15:57 GMT

கோமாரி தடுப்பூசி முகாம் 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு வெங்கனப்பாளையத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், ஒடுகத்தூர் கால்நடை மருத்துவர் வினீல்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு கண்களில் நீர் வடிதல், அம்மை நோய், கால்கள் வீக்கம், கோமாரி நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.அதேப்போல், பசுக்களுக்கு சினை ஊசி, நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News