நெல்லை மாநகர திமுக சார்பில் மருத்துவ முகாம்
திருநெல்வேலி மாநகர திமுக சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.;
Update: 2024-06-09 13:40 GMT
நெல்லை மாநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர திமுக இளைஞர் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று (ஜூன் 9) நடைபெற்றது.
இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.