மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இன்று நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்துவந்த இந்த மருத்துவ முகாமில், மாவட்டத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் வாரந்தோறும் பங்கேற்று அடையாள அட்டை பெற்று அதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வந்தனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்து வந்த இந்த முகாம் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் நடத்தப்பட்டதால் மார்ச் 7ம் தேதி வரை நிறுத்தப்பட்டது. ஆனால் மார்ச் மாதத்தில், லோக்சபா தொகுதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 5 மாத இடை வெளிக்குப்பிறகு தற்போது தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.