நெல்லையில் நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம்
நெல்லையில் நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-14 12:20 GMT
மருத்துவ முகாம்
நெல்லை மாநகர சமாதானபுரம் மனக்காவலப்பிள்ளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச சித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம் மூலம் திருச்செந்தூருக்கு நடை பயணமாக செல்லும் பக்தர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருந்தனர்.