பிரம்மதேசம் ஊராட்சியில் மருத்துவ முகாம்

பிரம்மதேசம் ஊராட்சியில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 114 பேர் பயனடைந்தனர்.

Update: 2024-02-18 04:43 GMT

மருத்துவ முகாம் 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் இல்லம் தேடி கல்வித்திட்டம், பிரம்மதேசம் ஊராட்சி மன்றம், திருநெல்வேலி பீஸ் ஹெல்த் சென்டர் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை, பிரம்மதேசத்தில் உள்ள, சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.முகாமிற்கு, பிரம்மதேசம் ஊராட்சி மன்ற தலைவர் ராம்சங்கர் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்த்தி சந்திரன் முன்னிலை வகித்தார். இந்த முகாம் மூலம் 114 பேர் பயனடைந்தனர்.
Tags:    

Similar News