மருத்துவர்கள் இன்றி நடைபெறும் மக்களை தேடி மருத்துவம் முகாம்

சிவகங்கை அருகே மருத்துவர்கள் இன்றி நடைபெறும் மக்களை தேடி மருத்துவம் முகாம் - நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2024-05-26 10:30 GMT

மக்களை தேடி மருத்துவ முகாம்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இத்திட்டங்களால் மக்கள் பயன்பெற்றார்களா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. காரணம் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் பணியாளர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சம்பவம் சிவகங்கை அருகே அமைந்துள்ளது. சிவகங்கை அருகே பழங்குடி இன மக்கள் வாழும் பழமலைநகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மக்களை தேடி மருத்துவத் திட்ட முகாம் நடைபெற்றது. மருத்துவ உபகரணங்கள் மருந்து மாத்திரைகள், மருத்துவர் செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய முகாம் நடைபெற வேண்டும். ஆனால் இதில் பணியாற்றும் மருத்துவர் பணிக்கு வராததால் மருத்துவ உதவியாளர்களே பழங்குடியின மக்களுக்கு மருத்துவம் பார்த்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதனால் தங்களுக்கு தமிழக அரசின் உயர்தர மருத்துவ சிகிச்சையை பெற இயலாமல் பழங்குடி இன மக்கள் சிகிச்சை பெற்றனர். ஒன்றும் அறியாத அப்பாவி மக்களுக்கு சிகிச்சை அளிக்க வராமல் மருத்துவர்கள் புறக்கணிப்பது தமிழக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து உயர் அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News