குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்

Update: 2023-11-14 08:56 GMT
திருப்பத்தூர் மருத்துவ முகாம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மண விழா முன்னிட்டும் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டும் PES குப்பம் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திருப்பத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தை கட்சி மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் சர்க்கரை நோய் சிகிச்சை, உயர் இரத்த அழுத்த சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை, அறுவை சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளிட்டவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது உடன் இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News