பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள்!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

Update: 2024-01-13 09:30 GMT
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் மணி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் பயிற்சி மருத்துவர்கள் பாரம்பரிய முறைப்படி கிராமத்து மண்வாசனை மாறாமல் குடிசை வீடு அமைத்து ஏர் உழுதும், நடவு நட்டும்,  விளைந்த நெல் மணிகளை பாரம்பரிய முறைப்படி கதிர் அடித்து பழமை மாறாமல் கொண்டாடி மகிழ்ந்தனர்.  மருத்துவபயிற்சி மாணவிகள் எங்களுக்கு ஸ்டேதஸ்  கோப் மட்டும் பிடிக்கத் தெரியாது குலவை அடித்து கும்மி அடிக்கவும் தெரியும், கரகம் எடுத்து ஆடவும் தெரியும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கவும் தெரியும் என்பதை பறைசாற்றும் விதமாக மாணவ மாணவியர்கள் செய்து காட்டினர். கிராமங்களை கொண்டாடும் பொங்கல் விழாவே இங்கு கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் காய்கறி பொங்கல், சிறுதானிய வகைகள் , மாவிலை தோரணம் , இன்று பழமையை நிறைவு கூறும்வி தமாக பல்வேறு வகையான பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந் தனர்
Tags:    

Similar News