மருத்துவ கழிவுகளை கொட்டி அசுத்தம்: சமூக விரோதிகள் மீது நடவடிக்கை

மருத்துவ கழிவுகளை பொன்னேரியில் கொட்டி அசுத்தப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2024-05-26 16:22 GMT

மருத்துவ கழிவுகள்

ஜெயங்கொண்டம் அருகே மருத்துவ கழிவுகளை கொட்டும் குப்பை மேடாக ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட பொன்னேரியை மாற்றி வரும் சமூக விரோதிகள்  ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும்சோழ கங்கம் என்னும் பொன்னேரி 1400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஏரி சுருங்கி 400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் ஏரி தரை பகுதியாக உள்ளது இந்த பொன்னேரியில் சமூக விரோதிகள் தற்போது மருந்து கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர்   தற்போது மருந்து கழிவுகளை மட்டும் இன்றி மனித கழிவுகள் கோழி இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றையும் கொட்டி நாசமாக்கி ஏரியை உபயோகமற்ற நிலைக்கு கொண்டு செல்கின்றனர் .

நீர்ப்பிடிப்பு அதிகம் இருக்கக்கூடிய வடபுறத்தில் தற்போது சமூகவிரோதிகள் சிலர் மூட்டை மூட்டைகளாக காலாவதியான மருந்து பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்ட ஊசி மற்றும் மாத்திரைகள் உள்ளடங்கிய மருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் ஏரியில் மருந்து கழிவுகள் கலந்து ஏரியின் நீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கும் நிலத்தில் விளைவிக்க கூடிய பயிர்களுக்கும் நச்சு தன்மை ஏற்பட்டு விவசாயமும் மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டியது யார் என விசாரணை செய்து அவர்கள் மீது,

நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது  அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருந்து கழிவுகளா அல்லது தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருந்து  கழிவுகளா என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News