மீனாட்சி  அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மகா கும்பாபிஷேகம் 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா, மேல தண்ணிலப்பாடி மீனாட்சி  அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

Update: 2024-06-17 15:18 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா, மேல தண்ணிலப்பாடி மீனாட்  அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, 85 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைப்பெற்று முதல் காலயாக பூஜை நடைபெற்றது. 

நேற்று காலை இரண்டாவது கால யாக பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது ‌ தொடர்ந்து  கடம் புறப்பாடு நடைபெற்று  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மகாதீபாரதி காண்பிக்கப்பட்டது. இதில்  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை மேல தண்ணிலப்பாடி கிராம வாசிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News