மீனாட்சி அம்மன் பூப்பல்லாக்கு: மாசி வீதிகளில் காவல்துறை ஆணையர் ஆய்வு
மீனாட்சி அம்மன் பூப்பல்லாக்கில் மாசி வீதிகளில் காவல்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 17:22 GMT
காவல் ஆணையர் ஆய்வு செய்தார்
மதுரை மாசி வீதிகளில் காவல் ஆணையர் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்ற நிலையில் இன்று இரவு பூப்பல்லாக்கில் அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நான்கு மாசி வீதிகளிலும் சுமார் 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மாசிவீதியில் காவல் அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.