மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

Update: 2024-04-12 09:37 GMT

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா கோலகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது - 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 22ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோவிலாகும். இந்த விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா இன்று காலை மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்ககொடி மரத்தில் தர்ப்பை புற்களை வைத்து வெண்பட்டால் சுற்றப்பட்ட பிரமாண்டமான மாலை ஏற்றப்பட்டு மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் அறங்காவல்குழு நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கொடி மரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சிஅம்மன் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனா். கொடியேற்றுத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா இன்று தொடங்கி 12 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவின் போது நாள்தோறும் காலை மற்றும் மாலைகளில் நான்கு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்வாக வரும் 19ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 22ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து 23ம் தேதி இந்திரபூஜையுடன் விழா மீனாட்சியம்மன் கோவிலின் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நிறைவடையவுள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிராவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 23ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News