மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பன்னிரு திருமுறை நிகழ்வு

விழுப்புரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பன்னிரு திருமுறை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-12-13 06:40 GMT
 விழுப்புரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பன்னிரு திருமுறை நிகழ்ச்சி நடந்தது.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மகாராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பன்னிரு திருமுறை விண்ணப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் நிர்வாக அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், பக்தர் கள் பலர் கலந்துகொண்டு பன்னிரு திருமுறையில் இருந்து பதிகங்களை விண்ணப்பித்தனர். இதில் விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News