முசிறி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான கூட்டம்
செலவு கணக்கு வாசிக்கப்பட்டு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது
Update: 2023-12-09 01:29 GMT
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டம் மன்றத்தில் குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.ஒன்றிய ஆணையர்கள் மனோகரன் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் மன்றத்தில் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்து பேசினர் ஒன்றிய ஆணையர்கள் பொறியாளர்கள் அரசின் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் மத்தியில் விரிவாக பேசினர். ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய குழு துணை தலைவர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.