மேலகரம் கணபதி கோயில் கும்பாபிஷேகம்
தென்காசி அருகே மேலகரம் கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Update: 2024-03-22 02:39 GMT
தென்காசி அருகே மேலகரத்தில் அருள்மிகு ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீமுப்புடாதி அம்மன், ஸ்ரீகாலபைரவா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. காலையில் நான்காம்கால யாகவேள்வி பூஜை, விக்னேஷ்வரபூஜை, புண்ணியாகவனம், அங்குராா்ப்பணம், சூரியபூஜை, மண்டப பூஜை, வேதிகாா்ச்சனை ஹோமம், நாடிசந்தானம், ஸ்பா்ஸாஹுதி, திரவியாஹுதி, மகாபூா்ணாஹுதி, மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து யாத்ரா தானம், திருக்குடம் புறப்பாடாகி ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ முப்புடாதியம்மன் விமானம் மற்றும் பரிவார தேவதைக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகா அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.