ஊழல் கரை படிந்த கட்சி காங்கிரஸ் - பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர்

பாஜக;

Update: 2023-12-13 05:15 GMT

செய்தியாளர் சந்திப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

ஊழல் கரை படிந்த கட்சி காங்கிரஸ் கட்சி. ஜார்கண்ட் மாநிலத்தில் தீரஜ்சாகு என்ற ராஜ்யசபா எம்.பி யிடம்  மட்டும் கணக்கில் காட்டப்படாத 353 கோடி பணம் இருந்தால். மற்ற காங்கிரஸ் எம்.பிகளிடம் எவ்வளவு பணம் இருக்கும். ஒரு மாநிலத்தின் பட்ஜெட் ஒதுக்கும் நிதி அவரிடம் கைப்பற்றப்பட்டுள்ளது இவர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அவரின் பண பலத்திற்காக அவருக்கு ராஜசபா எம்.பி பதவி கொடுத்திருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.பாரத பிரதமர் .

மக்கள் மீண்டும் பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்கிறார்கள் அவர் மூன்றாவது முறையாக பிரதமராக வரப்போகிறார். இந்தியா கூட்டனி என்பது வாரிசு அரசியலுக்கும், ஊழல் செய்வதற்காக இணைந்த கூட்டனி ஆகும். மதுபான ஆலைகள் நடத்துவதால் எவ்வளவு கொள்ளை அடிக்க முடிகிறது என்பதனை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் திமுக-வும் மதுபான ஆலைகள் நடத்துகிறார்கள் . ஊழல் செய்ய ஆசைப்படுபவர்கள் ஊழல் என்பதை மூச்சாக கருதுகிறார்கள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய‌ முடியுமா ?.

நீட் தேர்வை ஏன் திமுக எதிர்க்கிறார்கள் பாமரருக்கு கூட தெரியும். நீட்டை நீக்க முடியாது என்பது. தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் மெடிக்கல் காலேஜ் வைத்திருக்கிறார்கள் என்று தெரியும் கோடி கோடியாய் பணம் பார்த்தவர்களுக்கு இப்ப பார்க்க முடியலனா வருத்தம் தானே இப்படி பட்ட நடவடிக்கையின் காரணமாக எளிய மாணவர்கள் எல்லாம் வரவேண்டும் என்பதற்காக தான் பாராத பிரதமர் அவர்கள்‌ நீட் தேர்வு கொண்டு வந்தார்கள். அன்று காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள்‌ சொன்னார்.100 ரூபாய் ஏழை எளிய‌ மக்களுக்கு கொடுக்க வேண்டி இருந்தால் அதில் அங்கு இங்கும் பணம் சென்று சிதறி  10 ருபாய் தான் செல்கிறது. இன்று  டிஜிட்டல் முறையில் ஒரு பயணாளியின் வங்கி கணக்கில் பணம் முழுவதும் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு காங்கிரஸ் அமைச்சர்களும் செய்யும் ஊழலை பார்த்தால் காங்கிரஸ் கட்சியினர் ஊழல் செய்வதற்கு பயிற்சி பட்டறை நடத்துகிறார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் பணத்தை சுரண்டுபவர்கள் யாராக இருந்தாலும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் அதனால்தான் இந்தியாவில் நிதி மோசடி இல்லை பயங்கரவாதம் இல்லாமல் வளர்ச்சிப் பாதையில் இந்தியா செல்கிறது. ஒரு மாநிலத்தின் பட்ஜெட் ஒதுக்கும் நிதி அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் எம் பி இடம் தற்போது 353 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. பாஜக ஊழலை கட் செய்யும் கட்சி காங்கிரஸ் ஊழல் வாதிகளின் கட்சி . இந்தியா கூட்டணி என்பது ஊழல்வாதிகள் ஒன்றிணைந்த கூட்டணி. என சரமாரியாக குற்றச்சாட்டுகளை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags:    

Similar News