பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்
திருநெல்வேலி மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மரகன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-06-05 09:17 GMT
மரக்கன்று வழங்கும் விழா
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக மேலப்பாளையம் உழவர் சந்தை அருகே உலக சுற்றுச்சூழல் தினம், காயிதே மில்லத் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 5) மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாஷா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.