ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-06-05 13:37 GMT

நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி புதூர் வடகாட்டான் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில், பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது. இக்கோவிலில், இருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே பெண் வர கட்டுப்பாடு கடைப்பிடித்து வரப்படுகிறது. திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

இக்கோவிலில் இருந்து விபூதி முதல் பூஜை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எந்த பொருளையும் கோவில் எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல அனுமதி இல்லை. நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 300 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News