காங்கேயம் அருகே மனநலம் பாதித்த பெண் தீக்குளித்து தற்கொலை

மரவாபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து படுகாயம்  அடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலி.

Update: 2024-03-27 10:36 GMT

காவல்துறை விசாரணை


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரது மனைவி அபிராமி வயது 28. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் அபிராமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கடந்த ஒரு வருடமாக மிகவும் மனநலம் பாதிப்படைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 1 மணி அளவில் மரவாபாளையத்திலுள்ள அவரது அம்மா வீட்டில் இருந்த போது தானாகவே மண்ணெண்யை மேலே ஊற்றிக்கொண்டு தீப்பற்றி உள்ளார். இதனால் பலத்த தீக்காயமடைந்த அபிராமியை உறவினர்கள் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்‌. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து காங்கேயம் போலிசார் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News