மேட்டூர் : அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

மேட்டூரில் மாற்று கட்சியை சேர்ந்த 60 பேர் மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் முன்னிலையில் அதிமுக,வில் இணைந்தனர்.

Update: 2024-01-18 07:43 GMT

அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் 

மேட்டூர் சின்ன பார்க் அதிமுக அலுவலகத்தில் இன்று புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் 107-வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. அப்போது கொளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக  செயலாளர் கே. செல்வராஜ்  ஏற்பாட்டில் மாற்று கட்சியை சேர்ந்த 60 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் முன்னிலையில் அதிமுக,வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் சாலை அணிவித்து வரவேற்றார். புதிதாக இணைந்த   அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொளத்தூர் ஒன்றிக்குழு தலைவர் புவனேஸ்வரி, பேரூர் கழக செயலாளர் ராஜரத்தினம் ,மாவட்ட பிரதிநிதிகள் கலை செல்வி, பன்னீர்செல்வம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் திவ்யா மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News