மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழைபொழிவின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,098 வினாடிக்கு கண அடியாக குறைந்துள்ளது

Update: 2023-12-27 03:44 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு கன அடியாக 1,098 குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,295 கன அடியில் இருந்த நிலையில் இன்று 1,098 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.02 அடியில் இருந்து 71.09 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.64 டிஎம்சியாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News