மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 961 கன அடியாக சரிந்தது.
Update: 2024-01-23 03:44 GMT
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,250 கன அடியில் இருந்து இன்று 961 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியில் இருந்து 70.79 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.38 டிஎம்சியாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.