மேட்டூர் அணையின் நீர்வரத்து !

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கன அடியாக உள்ளது.

Update: 2024-03-11 04:38 GMT

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கன அடியாக உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக வினாடிக்கு 67 கன அடியாக உள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.62 அடியாகவும், நீர் இருப்பு 26.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News