இறந்தும் உயிர் வாழும் மேட்டூர் இளைஞர்

சேலம் மாவட்டம் மேட்டூரில் சாலை விபத்தில் மூளை சாவடைந்து உடலுறுப்பு தானம் செய்த இளைஞரின் சடலம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2023-12-25 07:48 GMT

தினேஷ்குமார் 

மேட்டூர் அருகே மேச்சேரி காமராஜ் பேட்டை சேர்ந்த நெசவுத் தொழிலாளி சவுண்டப்பன்,ருக்மணி தம்பதியினர். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் தினேஷ்குமார் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியா பார்மசி நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்தார். கடந்த 19ஆம் தேதி தினேஷ்குமார் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதில் மூளை சாவடைந்த தினேஷ்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் கிட்னி, கல்லீரல், இருதயம் ஆகிய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. இதனை அடுத்து தினேஷ்குமார் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேச்சேரியில் நெசவாளர் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் சார் ஆட்சியர் பொன்மணி, தாசில்தார் சுமதி, மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவ மணை கண்காணிப்பாளர் இளவரசி டி.எஸ்.பி, மரியமுத்து ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மயானத்திற்கு தினேஷ் குமார் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News