மின் மோட்டார் அறைகளை ஆய்வு செய்த மேயர்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மின் மோட்டார் அறைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். ;
Update: 2023-12-25 03:43 GMT
மேயர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர், ராம் நகர், ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி மற்றும் ஆதி பராசக்தி நகர் ஆகிய பகுதிகளிலுள்ள மின் மோட்டார் அறைகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு அதனை இயக்குவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்காக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பகுதிகளில் ஏற்கனவே ஜெனரேட்டா மூலம் மோட்டார்கள் இயக்கப்பட்டு வந்தாலும் தற்பொழுது தான் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகையால் இந்த பகுதியில் உள்ள பம்ப் ரூம்களில் உள்ள மின் மோட்டார்களை இயக்குவதற்கு தேவையான மின் வசதி வருகின்றதா, தண்ணீர் அளவை விட்டு பேனல் போர்டு உயரமாக உள்ளதா என்றும் மின் மோட்டார் இயக்குபவர்களையும் நேரில் அழைத்துச் சென்று பார்வையிட்டேன். மேலும் அப்பகுதியில் மின் பற்றாக்குறை இருந்தால் அதனை நிவர்த்தி செய்யவும் அதிகாலைக்குள் மின் மோட்டார்களை இயக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.