எடப்பாடி நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா

எடப்பாடி நகர அதிமுக சார்பில் எம் ஜிஆர் ன் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-17 13:37 GMT
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எடப்பாடியில் நகர அதிமுக சார்பில் நகரக் கழகச் செயலாளர் முருகன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான அமரர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் சொந்த தொகுதியான எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் முருகன் தலைமையில் அமரர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் எடப்பாடி முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன் மற்றும்  அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News