எம்ஜிஆர் பிறந்த நாள் - மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2024-01-18 03:17 GMT
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை தமிழகம் அதிமுகவினர் கோலாக்கலமாக கொண்டாடினர்.பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர்.

எம்ஜிஆரின் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கருமாரி மடம் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானமும் வழங்கப்பட்டது நகர கழக ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News