சேலத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-01-13 16:01 GMT

அதிமுக ஆலோசனை கூட்டம் 

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜூ, பொருளாளர் பங்க் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் பேசுகையில், வருகிற 17-ந் தேதி அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement

அன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். வடக்கு, தெற்கு, மேற்கில் பொதுக்கூட்டம் நடக்கிறது இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சரவணன், முருகன், ஜெயபிரகாஷ், சண்முகம், பேரவை செயலாளர் சரவணமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் மோகன், இலக்கிய அணி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சாம்ராஜ், விவசாய அணி செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கென்னடி, பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News