எம்.ஜி.ஆர் 36வது ஆண்டு நினைவு தினம்: அதிமுக சார்பில் அஞ்சலி
மயிலாடுதுறையில் எம்.ஜி.ஆர். 36வது ஆண்டு நினைவு தினத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 15:27 GMT
எம்ஜிஆர் படத்திற்கு மரியாதை
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைந்து 36 ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு தினமான டிசம்பர் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செந்தமிழன், ஒன்றிய கழக செயலாளர் சந்தோஷ்குமார், செருதியூர் நெடுஞ்செழியன், அதிமுக வழக்கறிஞர் அணி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.