புதுக்கோட்டையில் எம்ஜிஆரின் திரு உருவுருவ சிலைக்கு மரியாதை

புதுக்கோட்டையில் எம்ஜிஆரின் திரு உருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்;

Update: 2024-01-17 16:29 GMT

இனிப்பு வழங்கல் 

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனமான பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அதிமுக சார்பில் பழைய பேருந்தில் நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளர் வி.சி. இராமையா தலைமையில் புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் SAS ,சேட்டு என்ற அப்துல் ரகுமான் மற்றும் வடக்கு பகுதி நகர செயலாளர் பாஸ்கர் ஆகியோரது முன்னிலையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திரு உருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News