தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.;
Update: 2024-01-01 08:40 GMT
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.
திண்டுக்கல் தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. திண்டுக்கல் தூய மரியன்னை தேவாலயத்தில் பிஷப் தாமஸ் பாலச்சாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதே போல 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி ஆலயத்தில் புத்தாண்டு பிறக்கும் வித்தியாசமான காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு பிறந்த போது ஆலயத்திலுள்ள ஆலயமணி ஒலிக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கரவொலி எழுப்பினர். வண்ணமிகு வான வேடிக்கைகளோடு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.