சேலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
சேலத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
By : King 24x7 Website
Update: 2023-12-24 18:19 GMT
கிறிஸ்து பிறப்பை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று இரவு சேலத்தில் கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாட உள்ளனர். சேலம் மாநகரில் நள்ளிரவு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடக்கிறது. சேலம் அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அப்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன், குழந்தை இயேசுவின் சொருபத்தை கையில் எடுத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் உ யர்த்தி காண்பிப்பார். பின்னர் அவர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட குடிலில் சொரூபத்தை வைத்து சிறப்பு பிரார்த்தனையை தொடங்கி வைப்பார். இதையடுத்து குழந்தை இயேசு சொருபத்தை அனைவரும் தொட்டு வணங்குவர். பேராலயத்தில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், சிறுவர், சிறுமிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வருவார்கள். இதேபோல் சேலம் சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் தலைவர் ஆயர் எழில் ராபர்ட் கெவின் தலைமையிலும் தலைமையிலும், சூரமங்கலத்தில் உள்ள சி .எஸ் .ஐ .பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் ஆயர் சாந்தி பிரேம்குமார் தலைமையிலும், கிறிஸ்துமஸ் விழா நடைபெறவுள்ளது.