கன்னியாகுமரியில் பகவதியம்மனுக்கு நள்ளிரவில் ஆராட்டு

தை அமாவாசை விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் பகவதியம்மனுக்கு நள்ளிரவில் ஆராட்டு;

Update: 2024-02-10 10:51 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசையான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மல்ய பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பலவகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீவாரதனை, உஷ பூஜை, ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை,உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.  இரவு 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் வீதி உலா வரும்போது பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர். அம்மன் வீதி உலாவுக்கு பின்னர் நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வருடத்தில் 5 விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து  அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலில் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாரதனையும் நடைபெற்றது.
Tags:    

Similar News