குடும்ப தகராறு: ராணுவ வீரர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிண்றனர்.

Update: 2024-02-10 03:40 GMT

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள நாணல் காத்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வெயிலுமுத்து (36). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவ வீராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 8 மாதத்தில குடுமபத் தகராறில் மனைவி அவரை விட்டுப் பிரிந்து குலசேகரநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், வெயிலுமுத்து கடந்த 3ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், குலசேகரநல்லூரில் உள்ள மனைவியின் தாயர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மனைவியை குடும்பம் நடத்த வர அழைத்துள்ளார்.

அவர் வர மறுக்கவே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முறம்பன் ரோட்டில் வெயிலுமுத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News