பால் உற்பத்தியாளர்கள் செயல் விளக்க பயிற்சி முகாம்

ராசிபுரம் அடுத்த ஆர்.பட்டணத்தில் பால் உற்பத்தியாளர் செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-15 03:45 GMT

ராசிபுரம் அருகே உள்ள ஆர்.பட்டணம் பகுதியில் வடுகம், புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் பட்டணம் ரங்கசாமி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு டாக்டர் சொர்ண குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் டாக்டர் பேராசிரியர் ரவி கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்து எடுத்து கூறினார்.

மேலும் அவர் பேசும்போது கறவை மாடுகளை சுத்தமாக நோய் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், கால்நடையை கட்டும் இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கால்நடைகள் குடிப்பதற்கு சுத்தமான குடிநீரை வைக்க வேண்டும், பால் கறக்க மற்றும் பாலை ஊற்றி வைக்க சுத்தம் செய்யப்பட்ட ஸ்டெய்னர் ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும், பால் கறுப்பதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும், பால் தரும் கால்நடைக்கு பசுமையான புல்லைக் கொடுக்க வேண்டும்,

மேலும் பால் கறந்த பின்பு பால் மடியை தூய்மையாக தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் இதனால் பால் மடியில் நுண்கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டு நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம், தொடர்ந்து அதுமட்டுமில்லாமல் கால்நடைகளின் கோடைகால பராமரிப்பு ,கன்றுகள் வளர்ப்பு, கால்நடை உற்பத்திக்கு பசுந்தீவனங்களின் பங்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேலும் அரசின் சலுகைகள், நலத்திட்டங்கள், கால்நடைகளின் முக்கிய நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள் உள்ளிட்ட வழிமுறைகளை விரிவாக எடுத்து கூறினார்கள். இந்த முகாமில், முகாமில் டாக்டர்கள் சின்னுசாமி, கிஷோர் குமார், நரேந்திரன், சாய்குமார் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் குணசேகரன்,  மைவிழி , உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டு பால் விவசாயிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பாக உணவு ஏற்பாடு செய்து இருந்தனர்.

Tags:    

Similar News