மாதவரம் பால் பண்ணையில் பால் வினியோகம் முற்றிலும் நிறுத்தம்

மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

Update: 2024-06-07 07:51 GMT

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் பால் பண்ணைக்கு வெளி மாவட்டங்களில் வரவேண்டிய தினசரி பால் வரத்து கடுமையாக சரிவடைந்துள்ளதோடு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து இன்றும் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.

இதன் காரணமாக மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோருக்கான மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்த வாகனங்கள் என சுமார் 30க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் தற்போது அதிகாலை 4.45மணி நிலவரப்படி ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மாதவரம் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, தொடங்கி மணலி, மீஞ்சூர் எண்ணூர் மற்றும் புரசைவாக்கம், ஓட்டேரி, சூளை, பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய சுமார் 2லட்சம் லிட்டர் ஆவின் பால் தற்போது வரை விநியோகம் செய்யப்படவில்லை.

Tags:    

Similar News