மனம், உடல் ஆரோக்கிய தினம் அனுசரிப்பு

சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் மனம், உடல் ஆரோக்கிய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-04 06:53 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சர்வதேச மனம், உடல் ஆரோக்கிய தினம் பொதுமக்களுக்கு மனம், உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் நோக்கில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் அறிவுறுத்தலின் பேரின், சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டுநலப்பணித்திட்ட அமைப்பின் மூலம் சர்வதேச மனம், உடல் ஆரோக்கிய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். மேலும் சிறப்பு விருந்தினருக்கு மரக்கன்று வழங்கி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சேலம் ஸர்த்திகா ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தின் நிறுவனர் மற்றும் யோகா பயிற்சியாளர் டாக்டர் பார்த்திபன் பங்கேற்று, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் அவசியம் மற்றும் அதில் யோகாவின் பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் துறையை சேர்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தனசேகர், டாக்டர் ஜெயபாலன், மைபிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News