பழனி கோயிலுக்கு மினி பஸ் வசதி

பழனி கோயிலுக்கு மினி பஸ் வழங்கிய ஒன்றிய செயலாளரால் பரவசம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-07 12:40 GMT

பழனி கோயிலுக்கு மினி பஸ் வழங்கிய ஒன்றிய செயலாளரால் பரவசம் ஏற்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பழனி கோயிலுக்கு மினி பஸ் வழங்கிய ஒன்றிய செயலாளரால் பரவசம் ஏற்பட்டுள்ளது.

பழனி கோவிலுக்கு திண்டுக்கல் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் அன்பளிப்பாக வழங்கிய மினிபேருந்து விரைவில் பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு இன்று திண்டுக்கல்லை சேர்ந்த முருக பக்தர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி பேருந்தை பழனி கோவிலுக்கு வழங்கி உள்ளார்.

இதன் மூலம் மினி பேருந்தில் வெளியூரில் இருந்து வரும் பக்த்கள் பத்து ரூபாய் கட்டணத்தில் பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது, என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News