நலத்திட்டங்களை வழங்கிய பொறுப்பு அமைச்சர்
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.;
Update: 2024-03-13 07:14 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம், நேருஜி கலையரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 13) நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.