சகஜானந்தா நினைவு மண்டபத்தில் அமைச்சர் மரியாதை
சுவாமி சகஜானந்தா பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
Update: 2024-01-30 01:31 GMT
மாலை அணிவித்து மரியாதை
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் சுவாமி சகஜானந்தாவின் 134-வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா நினைவு மண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் சரண்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.