சங்ககிரி இ-சேவை மையத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு விருது
Update: 2023-11-21 07:31 GMT
விருது வழங்கிய அமைச்சர்
சேலம் மாவட்டம் சங்ககிரி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் கடந்த பல ஆண்டுகளாக பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் சேலம் மாவட்ட அளவில் வங்கியின் பொது சேவை மையத்தின் செயல்பாடுகளை பாராட்டி தமிழக அரசு சார்பில் நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வங்கியின் செயலாளர் செந்தில்குமாரிடம் விருது வழங்கினார். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மீராபாய், சங்ககிரி சரக துணைப் பதிவாளர் பிராங்ளின்தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.